Home இந்தியா மனைவிக்கு தெரியாமல் சிறுமியுடன் குடித்தனம்.! விசாரணையில் 11 பேர் பகீர்.!

மனைவிக்கு தெரியாமல் சிறுமியுடன் குடித்தனம்.! விசாரணையில் 11 பேர் பகீர்.!

121
0

Mobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ  கண்டறியும் App!! Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த ராஜா முகமது-ஜமீலா என்ற தம்பதியின் மகன் ராவுத்தர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அபிசாத் பேகம் என்ற பெண்ணை 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர்.

அப்போது பெண் வீட்டார் சார்பில் 20 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. ஆனால் கூடுதலாக பணம் கேட்டு கணவர் குடும்பத்தினர் மற்றும் 11 பேர் அந்தப் பெண்ணை கொடுமை படுத்தியுள்ளனர்.

மேலும் கணவரும் உடலளவிலும் மனதளவிலும் மனைவியை வெகுவாக அச்சுறுத்தி உள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வந்த ராவுத்தர் தன்னுடைய மனைவிக்கு தெரியாமல் 17 வயது இளம் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவருடைய முதல் மனைவி காவல்துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் 11 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

ராவுத்தர் மட்டும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மற்ற 10 பேரும் தலைமறைவாகி இருக்கின்றனர். தலைமறைவான அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here