முடி உதிர்தல் பலருக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கும். முடி உதிர்வு பல காரணங்களால் ஏற்படக்கூடும். பொதுவாக, காலநிலை மாற்றம், ஊட்டச்சத்து குறைபாடு, முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் குறைபாடு, சுசுற்றுச்சூழல் மாடு, முடிக்கு பயன்படுத்தும் செயற்கை பொருட்கள் என பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு ஏற்படக்கூடும்.

சில முக்கியமான இயற்கை உணவுகளையும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் முடியும்.

முடி வளர்ச்சிக்கு தேவையான உணவுகள்

கீரை வகைகள்

முடி வளர்ச்சிக்கு கீரை ஒரு சிறந்த சைவ உணவு. கீரைகள் இரும்புச்சத்து, வைட்டமின் A மற்றும் C மற்றும் புரதச்சத்து ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாகும்.

இரும்புச்சத்துக் குறைபாடு காரணமாக முடி உதிர்வு ஏற்படக்கூடும். கீரைகளில் இரும்புச் சத்து மட்டுமல்ல, கூந்தலுக்கு இயற்கையாக ஊட்டச்சத்துக்களையும் சரும பொலிவையும் கூட வழங்கும்.

கீரைகளில் இருந்து நமக்கு ஒமேகா-3 அமிலம், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை கிடைக்கும். இவை உச்சந்தலை ஆரோக்கியத்தை பராமரிக்கவும் மற்றும் பளபளப்பான முடியமைப்பை பெறவும் உதவியாக இருக்கும்.

முட்டை மற்றும் பால் பொருட்கள்

முட்டை மற்றும் பால் பொருட்கள் முடி வளர்ச்சி மற்றும் முடியின் அடர்த்திக்கு சிறந்த உணவுகள் ஆகும்.

பால், தயிர் மற்றும் முட்டைகளில் புரதங்கள், வைட்டமின் B12, இரும்பு, துத்தநாகம் மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

பால் பொருட்கள் பயோட்டின் (வைட்டமின் B7) இன் ஒரு சிறந்த மூலமாகும், இது முடி உதிர்தலை எதிர்த்துப் போராட உதவுகிறது.

வாதுமை கொட்டைகள்:

முடி உதிர்வதைத் தடுக்க உங்கள் உணவு வழக்கத்தில் தினசரி சில வாதுமை கொட்டைகளைச் சேர்த்துக்கொள்வது சிறந்தது.

இது பயோட்டின், B வைட்டமின்கள் (B1, B6 மற்றும் B9), வைட்டமின் E, ஏராளமான புரதம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்ட உணவு ஆகும், இவை அனைத்தும் முடி உதிர்வை வலுப்படுத்தி உச்சந்தலையை வளப்படுத்தும்.

கொய்யா:

வைட்டமின் C உங்கள் கூந்தல் உடையாமல் தடுக்க உதவுகிறது மற்றும் கொய்யாவில் ஆரஞ்சை விட அதிக வைட்டமின் C உள்ளது.

பழங்களைப் போலவே, இலைகளிலும் வைட்டமின் B மற்றும் C உள்ளது, இது முடி வளர்ச்சிக்குத் தேவையான கொலாஜன் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

பருப்பு வகைகள்:

உளுந்தில் புரதம், இரும்பு, துத்தநாகம் மற்றும் பயோட்டின் நிறைந்துள்ளது, இவை அனைத்தும் உங்கள் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஆகும்.

இது தவிர, பருப்பு வகைகளில் ஃபோலிக் அமிலமும் நிறைந்துள்ளது, இது சருமம் மற்றும் உச்சந்தலைக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்கும் சிவப்பு இரத்த அணுக்களின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க அவசியம், இதனால், உங்கள் தலைமுடியை வலிமையாக்கி, உடைவதைத் தடுக்க முடியும்.

சூரிய வெளிப்பாடு, மாசுபாடு மற்றும் இரசாயனப் பொருட்களின் வழக்கமான பயன்பாடு போன்ற உங்கள் தலைமுடியை சேதப்படுத்தலாம், மோசமான உணவு முடி உதிர்தலுக்கு மிகவும் பொதுவான காரணமாகும்.

எனவே, இந்த ஊட்டச்சத்துக்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த உணவுகள் முடி உதிர்தலை நிறுத்தி நீண்ட மற்றும் வலுவான முடியைக் கொடுக்க உதவும்.

மேலும் இது போன்ற மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: file_get_contents(index.php): failed to open stream: No such file or directory in /home/u635468582/domains/pazhangudi.com/public_html/wp-includes/plugin.php on line 437

Warning: file_get_contents(index.php): failed to open stream: No such file or directory in /home/u635468582/domains/pazhangudi.com/public_html/wp-includes/plugin.php on line 437

Warning: file_get_contents(index.php): failed to open stream: No such file or directory in /home/u635468582/domains/pazhangudi.com/public_html/wp-includes/plugin.php on line 437

Warning: file_get_contents(index.php): failed to open stream: No such file or directory in /home/u635468582/domains/pazhangudi.com/public_html/wp-includes/plugin.php on line 437