வெற்றி செல்வன், அஞ்சான், விஞ்ஞானி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி, குணசித்ர வேடங்களில் நடித்தவர் தான் சஞ்சனா சிங்.

கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கி இருந்த 5 மாத காலத்தில் தினமும் ஒரு மெசேஜ், வீடியோ என்று சமூக வலைத் தள பக்கத்தில் பகிர்ந்து தனது உடற்பயிற்சி திறமைகளை வெளிக்காட்டி வந்தார்.

தலைகீழாக நின்று டி ஷர்ட்டை கால்கலால் அணியும் வீடியோ சில மாதங்களுக்கு முன் வைரலானது. தற்போது தென்னை மரம் ஏறி அசத்தி இருக்கிறார்.

தான் போட்டிருந்த துப்பட்டாவைக் கயிறு போல் சுழற்றி அதை மரம் ஏறுபவர்கள் போல் காலில் கட்டிக்கொண்டு கிடுகிடுவெனத் தென்னை மரத்தில் ஏறியதோடு, உச்சிவரை சென்று பின்பு கீழே இறங்கியுள்ளார்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here